Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

MasterChef வெற்றியாளர் சஷி செல்லய்யாவுக்கு கமல்,ஆமிர் கானுக்குச் சமைக்க ஆசையாம்

சிங்கப்பூரில் பிறந்த சஷி செல்லய்யா கடந்த வாரம் நடைபெற்ற மாஸ்டர்ஷெஃப் ஆஸ்திரேலியா 2018 (MasterChef Australia 2018) சமையல் போட்டியில் வெற்றிபெற்றார்.

வாசிப்புநேரம் -
MasterChef வெற்றியாளர் சஷி செல்லய்யாவுக்கு கமல்,ஆமிர் கானுக்குச் சமைக்க ஆசையாம்

(படம்: Facebook/SashiCheliah)

சிங்கப்பூரில் பிறந்த சஷி செல்லய்யா கடந்த வாரம் நடைபெற்ற மாஸ்டர்ஷெஃப் ஆஸ்திரேலியா 2018 (MasterChef Australia 2018) சமையல் போட்டியில் வெற்றிபெற்றார்.

இந்தியாவில் சமைக்க தமக்கு ஆசையாக இருப்பதாகவும், இந்தியத் திரைப்பட நட்சத்திரங்களான கமல் ஹாசன், ஆமிர் கானுக்கு சமைத்துத் தர விரும்புவதாகவும் திரு. சஷி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதுவரை இந்தியாவில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சிறை அதிகாரியான 39 வயது சஷி, இறுதிப்போட்டியில் நூற்றுக்கு 93 புள்ளிகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

ரொக்கப் பரிசாக அவர் 250ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் பெற்றார்.

அந்த வெற்றியைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பலரும் அவரைப் பாராட்டிவருகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்