Images
  • yuan

சாலையில் பணத்தை இறைத்து பரபரப்பை ஏற்படுத்திய ஆடவர்

சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தில் வேலையில் அதிருப்தியாக இருந்த ஆடவர் ஒருவர் சாலையில் பணத்தை இறைத்திருக்கிறார். தற்போது அந்தப் பணத்தைத் அவர் திரும்பக் கேட்டிருக்கிறார்.

தானியக்க இயந்திரத்திலிருந்து எடுத்த சுமார் 19,000 வெள்ளி ரொக்கத்தை ஆடவர் சாலையில் வீசினார். 42 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் நிதானமின்றிச் செயல்பட்டுவிட்டதாகக் கூறினார்.

சாலையில் அவர் பணத்தை இறைத்தபோது வாகன நெரிசல் ஏற்பட்டது. பணத்தை எடுக்கும் முயற்சியில் பாதசாரிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.

பணத்தை இறைத்த பின் தமது செயலுக்காக மிகவும் வருந்தியதாக அவர் கூறினார். ஆடவரின் செயலைக் கண்டித்த காவல்துறை அதிகாரிகள், பணத்தை எடுத்தவர்கள் அதைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

சாதாரண பின்னணியைச் சேர்ந்த ஆடவருக்கு அந்தப் பணம் தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
 

Top