Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது 7 பேர் மரணம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஒரு ஹோட்டலில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது 7 பேர் மாண்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாசிப்புநேரம் -
இந்தியா: கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது 7 பேர் மரணம்

(படம்: AFP)

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஒரு ஹோட்டலில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது 7 பேர் மாண்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொட்டியைச் சுத்தம் செய்தபோது ஊழியர்கள் பாதுகாப்புக் கவசம் ஏதும் அணியாமல் இருந்ததாகவும் அதனால் அவர்கள் மூச்சுத்திணறி மாண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

நேற்றிரவு நடந்த சம்பவத்தின் தொடர்பில் ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாண்டவர்களில் 4 பேர் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தவர்கள் என்றும் மற்ற மூன்று பேர் அவர்களுக்கு உதவியவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

இந்தியாவில் ஆண்டிற்கு 1350க்கு மேற்பட்டவர்கள் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது மரணமடைவதாக ஓர் ஆய்வு தெரிவித்திருக்கிறது.

அதற்குக் காரணம் ஊழியர்கள் பாதுகாப்புக் கவசம் அணியாமல் வேலை செய்வதுதான் என்றும் அது குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்