Images
  • scorpion (1)
    (படம்: Pixabay)

இலங்கை விமான நிலையத்தில் 200 நச்சுத் தேள்களை கடத்த முயற்சி

இலங்கை விமான நிலையத்தில் 200 நச்சுத் தேள்களை கடத்த முயன்ற சீன ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிருடன் இருந்த அந்தத் தேள்கள் பிளாஸ்டிக் பெட்டிகளில் கண்டெடுக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

சீனாவுக்குச் சென்றதும் தேள்களிலிருக்கும் நச்சுத்தன்மையைத் தனியாய் பிரித்தெடுக்க அந்த ஆடவர் திட்டமிட்டிருந்ததாய் அதிகாரிகள் நம்புகின்றனர்.
இருப்பினும் அந்தத் தேள்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.

550 டாலர் விதிக்கப்பட்ட அந்த ஆடவர் மீண்டும் சீனாவுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அரியவகை உயிரினங்ளையும் சட்டவிரோத போதைப் பொருள்களையும் கடத்துவதைத் தடுப்பது இலங்கைக்குப் பெரிய சவாலாக அமைந்துள்ளது.  

Top