Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென்சீனக் கடலில் பிலிப்பீன்ஸ் படகுமீது மோதியது சீனக் கப்பல் தான் : பெய்ச்சிங்

தென்சீனக் கடல் பகுதியில் நடந்த கப்பல் விபத்தில் பிலிப்பீன்ஸ் மீன்பிடிப் படகை மோதியது சீனக் கப்பல்தான் என்பதை பெய்ச்சிங் உறுதிசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -

தென்சீனக் கடல் பகுதியில் நடந்த கப்பல் விபத்தில் பிலிப்பீன்ஸ் மீன்பிடிப் படகை மோதியது சீனக் கப்பல்தான் என்பதை பெய்ச்சிங் உறுதிசெய்துள்ளது.

அந்த மோதல் தென்சீனக் கடல் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மோதலுக்குப்பிறகு கப்பல் பாதுகாப்புக் காரணங்களுக்காக சம்பவ இடத்தைவிட்டு விலகிச் சென்றதாக மணிலாவில் உள்ள சீனத் தூதரகம் கூறிற்று.

சீனக் கப்பலின் மாலுமி பிலிபபீன்ஸ் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்களைக் காப்பற்ற முயன்றதாகவும் மற்ற பிலிப்பீன்ஸ் மீன்பிடிப் படகுகள் முற்றுகையிடக்கூடும் என்பதால் சம்பவ இடத்தைவிட்டு விலகியதாகவும் தூதரகத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

அந்த விபத்து இயல்பாக நேர்ந்த ஒன்று என்றும் திட்டமிடப்பட்ட சதி அல்லவென்றும் சீனா கூறியுள்ளது.

பிலிப்பீன்ஸ் படகில் இருந்த அனைவரும் காப்பற்றப்பட்டதையும் சீனா உறுதிசெய்தது.

இருப்பினும் பிலிப்பீன்ஸ் கப்பலில் இருந்த 22 மீனவர்கள் தாங்கள் தண்ணீரில் சில மணி நேரத்தைச் செலவிட்டதாகவும் உதவிக்காகக் காத்திருந்ததாகவும் கூறியுள்ளனர்.

விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்