Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென், கிழக்கு சீனக் கடல் விவகாரங்களில் அமெரிக்கா மீது பெய்ச்சிங் காட்டம்

தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல் விவகாரங்களில் அமெரிக்கா மீது சீனா காட்டமடைந்துள்ளது.

வாசிப்புநேரம் -
தென், கிழக்கு சீனக் கடல் விவகாரங்களில் அமெரிக்கா மீது பெய்ச்சிங் காட்டம்

(படம்: Reuters)


தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல் விவகாரங்களில் அமெரிக்கா மீது சீனா காட்டமடைந்துள்ளது.

அந்த வட்டாரங்களில் சட்ட விரோதமான, ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சீனத் தனிநபர்களும் நிறுவனங்களும் தண்டிக்கப்படவேண்டும் என்று அமெரிக்கா பரிந்துரைத்திருந்தது.

அந்தப் பரிந்துரை, அனைத்துலகச் சட்டத்துக்குப் புறம்பானது என்று சீனா கண்டனம் தெரிவித்தது.

சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் தனது அரசுரிமைக்குட்பட்டதே என்று சீனா தெரிவித்துள்ளது.

வாஷிங்டனின் முடிவு, ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமடைந்துள்ள உறவை மேலும் மோசமாக்கக்கூடும். எனவே, இந்த அம்சத்தில் அமெரிக்கா தனது பரிந்துரையைப் பரிசீலனை செய்யவேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் செனட் சபையில் விரைவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்