Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென்கிழக்காசியப் போட்டி: மாண்ட தந்தைக்குத் தங்கப் பதக்கத்தை அர்ப்பணித்த மகன்

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போர், பதக்கம் வென்று அதைப் பெற்றோரிடம் காட்டவேண்டும் என்று ஆசைப்படுவர்.  

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசியப் போட்டி: மாண்ட தந்தைக்குத் தங்கப் பதக்கத்தை அர்ப்பணித்த மகன்

படம்: FACEBOOK/SEAGAMES

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போர், பதக்கம் வென்று அதைப் பெற்றோரிடம் காட்டவேண்டும் என்று ஆசைப்படுவர்.

வூஷூ விளையாட்டில் இந்தோனேசியாவைப் பிரதிநிதித்த எட்கர் ஸேவியர் மார்வேலோவும் (Edgar Xavier Marvelo) அப்படி ஆசைப்பட்டார்.

டிசம்பர் 4-ஆம் தேதி அன்று நடைபெற்ற ஆண்களுக்கான குன்ஷூ, தவ்ஷூ ஆட்டங்களில் அவர் தம் குழுவினருடன் தங்கப் பதக்கங்களை வென்றார்.
அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், எட்கரின் இன்பம் நீடிக்கவில்லை.

போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எட்கரின் தந்தை காலமானார். போட்டியில் வென்ற பிறகே அந்தச் செய்தி அவருக்குச் சொல்லப்பட்டது. தங்கத்தை வென்ற எட்கர் அதை நாட்டுக்கும் தம் தந்தைக்கும் அர்ப்பணித்தார்.

தென் கிழக்காசியா விளையாட்டுகளுக்கான Facebook பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட இந்தத் தகவல், 1,900 முறைப் பகிரப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்