Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மோசமான காற்றுத்தரம் -மலேசியாவின் சிலாங்கூரில் பள்ளிகள் மூடப்பட்டன

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியதால், 29 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாய், The Star Online இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
மோசமான காற்றுத்தரம் -மலேசியாவின் சிலாங்கூரில் பள்ளிகள் மூடப்பட்டன

(படம்: Reuters)

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியதால், 29 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாய், The Star Online இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.

மூடப்பட்ட 29 பள்ளிகளில் 24 பள்ளிகள் கிள்ளான் மாவட்டத்தில் உள்ளன.

அங்கு காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது.

நேற்று 5 பள்ளிகள் மூடப்பட்டிருந்ததாக சிலாங்கூர் மாநில கல்விப்பிரிவு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது.

காற்றின் தரம் மோசமான நிலையை எட்டினால், பள்ளிகள் உடனடியாக மூடப்படவேண்டும் என்று பிரிவு பள்ளிகளுக்கு நினைவூட்டியது.

இன்று மூடப்பட்ட பள்ளிகளால், சுமார் 45,000 மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று The Star Online இணையத்தளம் குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்