Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: தென்கொரியத் தலைநகர் சோலில் நெருக்கடிநிலை

COVID-19: தென்கொரியத் தலைநகர் சோலில் நெருக்கடிநிலை

வாசிப்புநேரம் -
COVID-19: தென்கொரியத் தலைநகர் சோலில் நெருக்கடிநிலை

(கோப்புப் படம்: AP/Ahn Young-joon)

தென்கொரியத் தலைநகர் சோலில் கிருமிப்பரவல் தொடர்பில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இந்த ஆண்டு இறுதிவரை அது நடப்பில் இருக்கும்.

சோலில் மூன்றாம் கட்டக் கிருமிப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் போராடிவருகின்றனர்.

கடந்த 6 நாள்களில் முதல்முறையாகக் கிருமித்தொற்று உறுதியாவோரின் தினசரி எண்ணிக்கை 300க்கும் கீழ் பதிவானது.

இருப்பினும், வார இறுதியில் கிருமித்தொற்றுச் சோதனை குறைவாக நடத்தப்பட்டதே அதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறினர்.

நாளை முதல் தலைநகர் சோலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமித்தொற்றுக்கான விழிப்புநிலை மூன்றாம்-நிலைக்கு உயர்த்தப்படும்.

அதன்கீழ் 10 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்படும்.

மதுபானக் கூடங்களையும் இரவு விடுதிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இரவு 9 மணிக்குப் பிறகு உணவகங்களிலிருந்து உணவை வாங்கிச் செல்ல மட்டுமே இயலும்;அல்லது விநியோகச் சேவையை நாடலாம்.

இரவு 10 மணிக்குப் பிறகு பொதுப் போக்குவரத்துச் சேவைகள் 20 விழுக்காடு குறைக்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்