Images
  • seoul robots
    (படம்: AFP/Anthony WALLACE)

பாலர்பள்ளி மாணவர்களுக்கு ஆடிப் பாடிக் கற்றுக்கொடுக்கும் இயந்திரங்கள்

தென்கொரியத் தலைநகர் சோலின் பாலர்பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கற்க உதவும் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த தலைமுறையினரைத் தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்குத் தயார்ப்படுத்துவதே அந்தத் திட்டத்தின் நோக்கம் என்று சோல் அரசாங்கம் கூறியது.

Alpha Mini என்ற அந்த இயந்திரம் 24.5 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.

நடனமாடுவது, பாடுவது, கதைகள் படிப்பது, குங் ஃபூ (kung-fu) கற்றுக்கொடுப்பது ஆகிய அனைத்தையும் அந்த இயந்திரத்தால் செய்யமுடியும்.

அவை சோலில் உள்ள 300 பாலர்பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

அதனுடன் பழகும் அனுபவம் பிள்ளைகளிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

Alpha Mini இயந்திரங்கள் 3லிருந்து 5 வயதுடைய பிள்ளைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

-AFP

Top