Images
  • sk covid
    கோப்புப் படம்: AFP/Ed JONES

தென்கொரியத் தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத அளவு கிருமிப்பரவல்

தென்கொரியத் தலைநகர் சோலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆக அதிகமாக 1,700க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து பதிவான ஆக உயர்ந்த எண்ணிக்கை அது.

கடந்த சில வாரங்களாகத் தென்கொரியாவில் நோய்ப்பரவல் மோசமாகியுள்ளது.

நாடெங்கிலும் சுமார் 4,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

நோய்ப்பரவலால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் சுமை அதிகரித்துள்ளது.

தென்கொரியாவில் இன்னொரு நெருக்கடிநிலையை அறிவிப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்கின்றனர்.

மீண்டும் தொடரத் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Top