Images
  • vaccine (6)
    (படம்: REUTERS)

220 மில்லியன் முறை போடத் தேவையான தடுப்புமருந்தை விநியோகிக்கும் Serum Institute of India

உலகின் ஆக்ப பெரிய தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான Serum Institute of India, அடுத்த சில மாதங்களில் 220 மில்லியன் முறை போடத் தேவையான தடுப்புமருந்தைப் பல்வேறு மாநில அரசாங்கங்களுக்கு வழங்கவிருக்கிறது.

அதன் மூலம், இந்திய மக்கள் தொகையில் 8 விழுக்காட்டினர் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

மத்திய அரசாங்கத்துக்கு 110 மில்லியன் Covishield தடுப்பூசிகளும், ஏனைய தடுப்பூசிகள் மாநில அரசாங்கங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தடுப்பூசி ஒப்புதல் செயல்முறையை விரைவுப்படுத்த, Pfizer நிறுவனம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

பல மாதங்களுக்கு முன்னதாகவே Pfizer தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும் அவை இன்னும் முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை என்று நிறுவனம் குறிப்பிட்டது.

Top