Images
  • Sg bike
    கோப்புப் படம்:Today

ஆகப் பெரிய சைக்கிள் பகிர்வுச் சேவையாக உருமாறும் SG Bike

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் SG Bike நிறுவனம்,ஆகப் பெரிய சைக்கிள் பகிர்வுச் சேவை வழங்கும் நிறுவனமாக உருவெடுக்கவுள்ளது.

Mobike நிறுவனத்தின் செயல்பாட்டு உரிமத்தை SG Bike நிறுவனம் எடுத்துக்கொள்ள நிலப் போக்குவரத்து ஆணையம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

அதனால், SG Bike நிறுவனத்திடம் உள்ள சைக்கிள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவுள்ளது.

உள்ளூர் நிறுவனமான SG Bikeஇன் கீழ் தற்போது 3,000 சைக்கிள்கள் உள்ளன.

சீனாவின் Mobike, சிங்கப்பூர்ச் சந்தையைவிட்டு வெளியேறுவதால் SG Bike நிறுவனத்தால் 25,000 சைக்கிள்கள் வரை சேவையில் ஈடுபடுத்த முடியும்.

Mobike சேவையைப் பயன்படுத்தியோர் தங்கள் கணக்கில் இருக்கும் தொகையை SG Bike நிறுவனத்தின் கணக்குக்கு அடுத்த சில வாரங்களில் மாற்றிக்கொள்ளலாம்.

இதன் மூலம் Mobike சைக்கிள்களை SG Bike செயலியைக் கொண்டு பயன்படுத்த முடியும்.

QR குறியீட்டைக் கொண்டு சைக்கிள்களை எடுத்துக்கொள்ளும் திட்டத்தை மாற்ற விரும்பவில்லை என்று SG Bike தெரிவித்தது.

இதற்கு முன் ofo, obike ஆகிய சைக்கிள் பகிர்வுச் சேவை நிறுவனங்கள் சிங்கப்பூர்ச் சந்தையைவிட்டு வெளியேறின.

Top