Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூர்-மலேசியா இடையிலான எல்லை தாண்டிய பயணத் திட்டங்கள் சரியான முடிவு: ஜொகூர் முதலமைச்சர்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே, எல்லை தாண்டிய பயணத் திட்டங்களைச் செயல்படுத்த, இரு நாட்டு அரசாங்கங்களும் எடுத்த முடிவு சரியானது என, ஜொகூர் மாநில முதலமைச்சர் ஹஸ்னி முகமது கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே, எல்லை தாண்டிய பயணத் திட்டங்களைச் செயல்படுத்த, இரு நாட்டு அரசாங்கங்களும் எடுத்த முடிவு சரியானது என, ஜொகூர் மாநில முதலமைச்சர் ஹஸ்னி முகமது கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில், Reciprocal Green Lane என்னும் இருதரப்புத் தடையற்ற பயணமுறை, Periodic Commuting Arrangement என்னும் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பயண ஏற்பாடு ஆகியவை, ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடப்பில் உள்ளன.

பயணங்களின்போது, அதிகமானோர் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தால், தினசரிப் பயணங்களைச் செயல்படுத்த அது வழிவகுக்கும் என்று CNAவுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் திரு. ஹஸ்னி தெரிவித்தார்.

ஜொகூர் மாநில அரசாங்கம் பரிந்துரைத்துள்ள Daily Commuting Arrangment என்கிற தினசரிப் பயணமுறையைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார்.

அதன்கீழ், தினமும் 30,000 பேர்வரை பயணம் செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.

அதற்காக, 10 நாள்களுக்குச் செல்லுபடியாகும், சுமார் 3 முறை பயன்படுத்தக்கூடிய பயண அட்டைகளை, ஜொகூர் அரசாங்கம் வழங்கும் என்றார் அவர்.

பயணிகளுக்கு COVID-19 பரிசோதனைகளும் செய்யப்படும்.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜொகூர் பொருளியலை மேம்படுத்த, அது உதவும் என்று முதலமைச்சர் கூறினார்.

இருப்பினும், அண்மையில் மலேசியாவில் அதிகரித்துள்ள கிருமித்தொற்றுச் சம்பவங்கள், அந்தத் திட்டத்தின் செயல்பாட்டை முறியடிக்கக்கூடும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஒவ்வொரு நாளும் மலேசியாவில், புதிது புதிதாகக் கிருமி தொற்றும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்