Images
  • myanmar (11)
    (படம்: AFP / STR)

மியன்மாரின் அரசியல் சூழ்நிலைக்குத் தீர்வு காண அதிகம் செய்யவேண்டியுள்ளது: சிங்கப்பூர், மலேசியா

சிங்கப்பூரும் மலேசியாவும், மியன்மாரின் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்குத் தீர்வு காண்பதற்கு அதிகம் செய்யவேண்டியுள்ளதாகக் கூறியுள்ளன.

இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் நீடித்து நிலைத்திருக்கும் அமைதிக்கான தீர்வுக்கு ஆசியான் தொடர்ந்து ஆக்ககரமாகப் பங்காற்ற வேண்டும் என்று கருத்துரைத்தனர்.

சென்ற வாரம் ஜக்கர்த்தாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் மியன்மார் ராணுவத்துடன் சேர்ந்து ஆசியான் தலைவர்கள் ஐந்து அம்சத் திட்டத்தை ஒரு மனதாய் ஏற்றுக்கொண்டனர்.

அவற்றில் ஓர் அம்சம் மியன்மாரில் விரைவில் வன்முறை நிறுத்தப்படவேண்டும் என்பதாகும்.

மேலும் எல்லாத் தரப்பும் பங்குகொள்ளும் கலந்துரையாடலை வழிநடத்த ஆசியான் பேராளர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்றும் ஐந்து அம்சத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

Top