Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூருடனான சிறப்புப் பயணத்திட்டத்தை ரத்து செய்ய எண்ணவில்லை - ரியாவ் தீவு ஆளுநர் விளக்கம்

சிங்கப்பூருடனான சிறப்புப் பயணத்திட்டத்தை ரத்து செய்ய எண்ணவில்லை - ரியாவ் தீவு ஆளுநர் விளக்கம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருடனான
சிறப்புப் பயணத் திட்டத்தை ரத்து செய்ய எண்ணவில்லை என்று ரியாவ் தீவு ஆளுநர் அன்சார் அகமது (Ansar Ahmad) தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கடந்த வாரம், கிருமிப்பரவல் அதிகரித்ததால் முன்னர் பரிந்துரைக்கப்பட்ட சிறப்புப் பயண ஏற்பாட்டை, இந்தோனேசியாவின் ரியாவ் தீவு ரத்து செய்து விட்டதாகச் செய்தி வெளியானது.

அதைத் தொடர்ந்து திரு. அன்சார் நேற்று இணையம் வழியே செய்தியாளர்களிடம் பேசினார்.

சிங்கப்பூருடனான சிறப்புப் பயண ஏற்பாட்டை ரத்து செய்ததாக ரியாவ் தீவு எந்த தகவலையும் வெளியிடவில்லை என்று அவர் கூறினார்.

ரியாவ் தீவுகளில் COVID-19 நோய்ப்பரவல் கட்டுக்குள் உள்ளதாகச் சொன்ன அவர், இரு தரப்புச் சிறப்புப் பயணத் திட்டத்தைத் தொடங்க ஆர்வமாயிருப்பதாகக் கூறினார்.

ரியாவ், பாலி தீவுகளுக்கு மேலும் சில நாடுகளிலிருந்து விரைவில் பயணிகளை அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் திரு. அன்சார் தெரிவித்தார்.

இருப்பினும் சிங்கப்பூருடனான
சிறப்புப் பயணத் திட்டத்தை எப்போது தொடங்க வேண்டும் என்பது இந்தோனேசிய மத்திய
அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தது என்றும் திரு. அன்சார் குறிப்பிட்டார்.

இன்னும் சில நாளில் தெளிவான முடிவு கிடைக்கும் என்றார் அவர்.


- CNA/aw 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்