Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூர்-தாய்லந்து சிறப்புப் பயணத் திட்டங்களுக்கான கலந்துரையாடல்

சிங்கப்பூருக்கும்  தாய்லந்துக்கும் இடையிலான பயணங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கும் தாய்லந்துக்கும் இடையிலான பயணங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.

அது இவ்வாரம் நடைபெறலாம் என்று தாய்லந்தின் சுற்றுப்பயண, விளையாட்டுத் துறை தகவல் வெளியிட்டது.

இருதரப்புப் பேச்சு வெற்றியடைந்தால், ஆஸ்திரேலியா, நியூஸிலந்து ஆகியவற்றிலிருந்து வரும் பயணிகளையும் தாய்லந்து நாட்டுக்குள் அனுமதிக்கலாம்.
ஆஸ்திரேலியாவும் நியூஸிலந்தும் ஏற்கனவே சிங்கப்பூருடன் பயணத் திட்டங்கள் குறித்த பேச்சை நடத்திவருகின்றன.

வியட்நாம், லாவோஸ் போன்ற கிருமிப்பரவல் குறைவாக இருக்கும் நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவும் தாய்லந்து தயாராக உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பலருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதால் தாய்லந்து அங்குள்ளோரையும் நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்து நம்பிக்கை கொண்டுள்ளது.

தாய்லந்து அதன் சுற்றுப்பயணத் துறையை மீண்டும் மேம்படுத்த முயற்சி செய்துவரும் வேளையில் பிற நாடுகளுடனான சந்திப்புகள் இடம்பெறுகின்றன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்