Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருள்கள்

மாட்டுச் சாணத்திலிருந்து கைவினைப் பொருள்களைத் தயாரித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த கணேசன் பால்சாமி. 

வாசிப்புநேரம் -
இந்தியா: மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருள்கள்

படம்: AFP

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மாட்டுச் சாணத்திலிருந்து கைவினைப் பொருள்களைத் தயாரித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த கணேசன் பால்சாமி. தத்ரூபமாகக் காட்சியளிக்கும் புத்தரின் முகம், கோயில் கோபுரம், ஓவியங்கள் ஆகியவை 49 வயதுக் கலைஞரின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

அதற்கு மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் மட்டுமே அவர் பயன்படுத்துகிறார். அவை இரண்டுமே கிருமி நாசினிகள் என்பது இந்துக்கள் பலரின் நம்பிக்கை.

பால்சாமி தாம் சொந்தமாக வீட்டில்  வளர்க்கும் இரண்டு மாடுகளிடம் இருந்து மட்டுமே சாணத்தையும் கோமியத்தையும் பெறுகிறார். நாட்டு மாடுகளான அவை இயற்கையான புல்லைத் தின்று வளர்வதாகக் கூறுகிறார் அவர்.

இந்தியாவின் மத்திய அரசாங்கம், பசு மாடுகளிடம் இருந்து பெறப்படும் பொருள்களைச் சந்தைப்படுத்தும் வர்த்தக நிறுவனங்களுக்கு 60 விழுக்காடு வரை முதலீட்டு மானியம் வழங்குகிறது.

மாட்டு இறைச்சியும் தோலும் அதில் அடங்கமாட்டா.

மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் ஆதாரமாகக் கொண்ட அழகுப் பொருள்களின் விற்பனை அண்மைக் காலமாக, இணைய விற்பனையில் கொடிகட்டிப் பறக்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்