Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உலகின் ஆகக் குள்ளமான மனிதர் காலமானார்

கின்னஸ் புத்தகங்களால் உலகின் ஆகக் குள்ளமான நடமாடும் மனிதர் காமலானார். அவருக்கு வயது 27.

வாசிப்புநேரம் -
உலகின் ஆகக் குள்ளமான மனிதர் காலமானார்

(படம்: AFP/PRAKASH MATHEMA)

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் ஆகக் குள்ளமான நடமாடும் மனிதர் காலமானார். அவருக்கு வயது 27.

நிமோனியா காய்ச்சலால் ஏற்பட்ட இதயக் கோளாறு காரணமாக அவர் மாண்டார்.

நேப்பாளத்தில் வாழ்ந்த ககேந்திர தாப்பா மகாரின் (Khagendra Thapa Magar) உயரம் 67 சென்டிமீட்டர். எடை 6 கிலோகிராம்.

2010இல் உலகின் ஆகக் குள்ளமான நடமாடும் மனிதராக பதிவுசெய்யப்பட்டார் அவர்.

ஆனால் சுமார் 55 சென்டிமீட்டர் உயரத்தில் இருந்த மற்றொரு ஆடவர் அவரின் பட்டத்தை எடுத்துக்கொண்டார். ஆனால் 2015இல் அந்த ஆடவர் மாண்ட பின்னர், மகாருக்குப் பட்டம் திரும்ப வந்தது.

மகார் பிறந்தபோது அவர் உள்ளங்கை அளவு மட்டுமே இருந்ததாகக் கூறினார் அவரின் தாயார்.

அவர் தம் வாழ்நாளில் பல நாடுகளுக்குச் சென்று தொலைக்காட்சிகளில் பேசியிருக்கிறார்.

நேப்பாளத்தின் சுற்றுப்பயணத்துறைக் காணொளியில் இடம்பெற்றதில் புகழ்பெற்றார் மகார்.

அவரது மரணத்துக்குக் கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு இரங்கல் தெரிவித்தது.

பிலிப்பீன்ஸில் சுமார் 60 சென்டிமீட்டர் உயரத்தில் இருக்கும் ஜூன்ரே பலாவிங் (Junrey Balawing) உலகின் ஆகச் சிறிய மனிதர். ஆனால் அவரால் நடக்க இயலாது.

70 சென்டிமீட்டர் உயரத்தில் இருக்கும் கொலம்பியாவைச் சேர்ந்த எட்வர்ட் ஹெர்னன்டஸ் (Edward Hernandez) தற்போது உலகின் ஆகக் குள்ளமான நடமாடும் மனிதராக இருப்பார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்