Images
  • SG Indo Ties
    (படம்: Try Sutrisno Foo/ CNA)

சிங்கப்பூர்-இந்தோனேசிய உறவு தொடர்ந்து வலுப்பெற வேண்டும்: இந்தோனேசியத் துணையதிபர்


சிங்கப்பூருக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவு, அரசியல் உட்பட எல்லா அம்சங்களிலும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று இந்தோனேசியத் துணையதிபர் மஃரூஃப் அமீன் தெரிவித்துள்ளார்.

CNA வுக்குப் பிரத்யேகப் பேட்டியளித்த அவர், சிங்கப்பூரும், இந்தோனேசியாவும் பக்கத்து நாடுகள். ஒரு நாட்டில் சிரமங்கள், பேரழிவு, நிலையற்றதன்மை ஆகியவை இருக்கும்போது பக்கத்து நாட்டிலும் அவற்றின் தாக்கம் உணரப்படும் என்றார்.

அக்டோபரில் திரு. மஃரூஃப் அமீன், இந்தோனேசியத் துணையதிபராகப் பொறுப்பேற்றார்.

அதன் பிறகு, முதன்முறை அவர் அனைத்துலகச் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

இந்த வட்டாரத்தின் நிலைத்தன்மையைப் பேணிக்காக்க, சிங்கப்பூரும், இந்தோனேசியாவும் ஒன்றுக்கொன்று உதவ வேண்டும் என்றார். அரசியல், பொருளியல், பாதுகாப்பு உட்பட எல்லா அம்சங்களிலும் இரு தருப்பு உறவு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று திரு. மஃரூஃப் கூறினார்.


 

Top