Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் தொடர்புத் திறன் குறைபாடுள்ள பிள்ளையைத் துன்புறுத்திய சந்தேகத்தில் சிங்கப்பூர் ஆசிரியர்மீது குற்றச்சாட்டு

 மலேசியாவில் தொடர்புத் திறன் குறைபாடுள்ள பிள்ளையைத் துன்புறுத்திய சந்தேகத்தில் சிங்கப்பூர் ஆசிரியர்மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -

மலேசியாவில் தொடர்புத் திறன் குறைபாடுள்ள பிள்ளையைத் துன்புறுத்திய சந்தேகத்தில் சிங்கப்பூர் ஆசிரியர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரரான 51 வயது ஷரிப்பா மஸ்லான் (Sharifah Mazlan) அம்பாங் வட்டாரத்தில் உள்ள தொடர்புத் திறன் குறைபாடுள்ள பிள்ளைகளுக்கான நிலையத்தில் வேலை செய்கிறார்.

அவர் 2 வாரத்திற்கு முன்பு (அக்டோபர் 1ஆம் தேதி) 6 வயதுப் பிள்ளையொன்றைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பிள்ளையின் தலையில் காயம் இருந்ததால் பெற்றோர் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர்.

அதன்பிறகு அதிகாரிகள் சந்தேக நபரைக் கைதுசெய்தனர்.

இன்று நீதிமன்றத்தில் ஆசிரியர்மீது குற்றஞ்சாட்டப்பட்டபோது அவர் அந்தக் குற்றங்களை மறுத்தார்.

ஷரிப்பாவிற்குத் தொடர்புத் திறன் குறைபாடுள்ள 2 பிள்ளைகள் உள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 16,300 வெள்ளி அபராதம், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஷரிப்பா தமது விசா காலம் முடிந்தபிறகும் மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்