Images
  • airport (1)
    படம்: AFP/Manan Vatsyayana

ஹாங்காங்கிற்கு அத்தியாவசியமற்ற பயணம் வேண்டாம்: உள்துறை அமைச்சு எச்சரிக்கை

ஹாங்காங்கிற்கான அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு உள்துறை அமைச்சு சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.

ஹாங்காங்கில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவது அதற்குக் காரணம்.

முன்னுரைக்க முடியாத நிலையில் ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பதை அமைச்சு சுட்டியது.

ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து, பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் எதிர்பாரா விதமாக வன்முறைமிக்கவையாக மாறலாம் என்பதை அமைச்சு சுட்டியது.


Top