Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: சாலையில் பேருந்தை விழுங்கிய பெருங்குழி

சீனா: சாலையில் ஏற்பட்ட பெருங்குழியில் பேருந்து ஒன்றும், பாதசாரிகளும் விழுந்ததில் 6 பேர் மாண்டதாகவும், 10 பேர் காணாமல்போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனா: சாலையில் பேருந்தை விழுங்கிய பெருங்குழி

(படம்: AFP/STR)

சீனா: சாலையில் ஏற்பட்ட பெருங்குழியில் பேருந்து ஒன்றும், பாதசாரிகளும் விழுந்ததில் 6 பேர் மாண்டதாகவும், 10 பேர் காணாமல்போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நேற்று, சிங்ஹாய் (Qinghai) பகுதியில் நடந்தது.

ரோட்டில் ஏற்பட்ட பெருங்குழியில் விழாமல் இருக்க, பாதசாரிகள் தப்பி ஓடுவதும் குழிக்குள் சிலர் விழுவதும் சம்பவத்தின் தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளியில் காணப்பட்டது.

குழிக்குள் விழுந்தவர்களில் ஒரு குழந்தையும் இருந்ததாக நம்பப்படுகிறது.

தற்போது, மீட்புப் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதுவரை, 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்