Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தீயணைப்பாளர்களுக்கு உணவளிக்க வெளியில் சென்ற பெற்றோர்... வீட்டில் மூண்ட தீயில் மாண்ட மகள்கள்

 தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பாளர்களுக்கு உணவளிக்கச் சென்றபோது அவர்களின் மகள்கள் வீட்டில் மூண்ட தீச்சம்பவத்தில் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
தீயணைப்பாளர்களுக்கு உணவளிக்க வெளியில் சென்ற பெற்றோர்... வீட்டில் மூண்ட தீயில் மாண்ட மகள்கள்

(படம்: Facebook, Bernama)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஷா அலாம்: தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பாளர்களுக்கு உணவளிக்கச் சென்றபோது அவர்களின் மகள்கள் வீட்டில் மூண்ட தீச்சம்பவத்தில் மாண்டனர்.

அதிகாலையில் தீ மூண்டபோது 13 வயது நூர் சல்சபிலாவும் 16 வயது நூர் அயின் சுமாயாவும் வீட்டில் தனியாக இருந்தனர்.

ரசாயன ஆலையில் மூண்ட தீயை அணைத்துக்கொண்டிருந்த தீயணைப்பாளர்களுக்கு உணவு கொடுக்க பெற்றோர் இருவரும் அங்குச் சென்றிருந்தனர்.

அந்த நேரத்தில் அவர்களுடைய மரவீடு தீக்கு இரையானது. அருகில் வசித்த உறவினர் பிள்ளைகளைக் காப்பாற்ற முயன்றார். தீ வேகமாகப் பரவியதால் அவரால் வீட்டினுள் செல்ல முடியவில்லை.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பாளர்கள் 10 நிமிடத்தில் தீயை அணைத்தனர்.

சிறுமிகளின் சடலங்கள் அறையினுள் கண்டெடுக்கப்பட்டன.

இரு சகோதரிகளும் மிகவும் நெருக்கமாக இருந்ததாய் அவர்களின் தாயார் கூறினார்.

தீ மூண்டதற்கான காரணம் ஆராயப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்