Images
  • sk covid
    (படம்: REUTERS/ Heo Ran)

தென்கொரியாவில் டெல்ட்டா வகைக் கிருமியால் அடங்காமல் பரவும் நோய்த்தொற்று

தென்கொரியாவில் ஒரே நாளில் மேலும் 1,842 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அங்கு, கிருமிப்பரவல் அதிகரித்துவருவதற்கு டெல்ட்டா வகைக் கிருமி ஒரு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

நாடளவில், ஆங்காங்கே சிறு சிறு கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தலைநகர் சோலில் நடப்பில் இருக்கும் கட்டுப்பாடுகளை, அதைச் சுற்றியுள்ள மற்ற பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

தென்கொரியாவில் இதுவரை 184,000 பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது. சுமார் 2,000 பேர் மாண்டனர்.  

Top