Images
  • sk covid
    (கோப்புப் படம்: Reuters/Kim Hong-ji)

தென்கொரியா: COVID-19 - தொடர்புத் தடங்களைக் கண்டறியும் ஊழியர் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு

தென்கொரியாவில் கிருமித்தொற்றுக்கான தொடர்புத் தடங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருவதால் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர, தொடர்புத் தடங்களைக் கண்டுபிடித்து, மருத்துவச் சோதனை நடத்தி, தனிமைப்படுத்தும் முறைதான் சிறந்த வழி என்று தென்கொரிய அரசாங்கம் வலியுறுத்தியது.

எந்த வகையிலும் அலட்சியத்துக்கு இடங்கொடுக்கப் போவதில்லை என்பதில் அது உறுதியாக உள்ளது.

குறிப்பாக அண்மையில் கிருமிப்பரவல் அதிகம் பதிவாகியுள்ள தலைநகர் Seoulஇல் தொடர்புத் தடங்களை கண்டறியும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Top