Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியா: 55 முதல் 59 வயதுப் பிரிவினருக்குத் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

தென் கொரியாவில் 55 முதல் 59 வயதுப் பிரிவினருக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

தென் கொரியாவில் 55 முதல் 59 வயதுப் பிரிவினருக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

அங்கு நான்காம் கட்ட நோய்ப்பரவலைக் கையாள்வதில், அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால் அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அவசரமாகத் திரள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனால் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசிப் பதிவு இணையப்பக்கமும் செயலிழந்தது.

எனவே 55 முதல் 59 வயதுப் பிரிவினருக்குத் தடுப்பூசி போடும் திட்டம் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது.

தென் கொரியாவில் மூத்தோர், எளிதில் நோய்வாய்ப்படக்கூடியவர்கள், முன்னிலை சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆகியோருக்குத் தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்