Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கிருமியுடன் வாழப் பழகும் வேளையில், தென்கொரியாவை மீண்டும் வதைத்து எடுக்கும் நோய்ப்பரவல்

தென் கொரியா கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, எல்லைகளை மீண்டும் திறந்துவிடும் வேளையில், அங்கு கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மேலும் அதிகரித்திருப்பதாக அஞ்சப்படுகிறது. 

வாசிப்புநேரம் -
கிருமியுடன் வாழப் பழகும் வேளையில், தென்கொரியாவை மீண்டும் வதைத்து எடுக்கும் நோய்ப்பரவல்

படம்: AFP / Ed JONES

தென் கொரியா கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, எல்லைகளை மீண்டும் திறந்துவிடும் வேளையில், அங்கு கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மேலும் அதிகரித்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

மரணமடைவோர், ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் ஆகியோரின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டிருக்கிறது. நாள்தோறும் கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை நாலாயிரத்தைக் கடந்துள்ளது.

அரசாங்கம் மேலும் கட்டுப்பாடுகளை நாளை மறுநாள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் சோல், அதைச்சுற்றியுள்ள வட்டாரம், துறைமுக நகரான இன்சியோன் (Incheon) முதலியவற்றைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.

தென்கொரியா COVID-19 நோய்த்தொற்றுடன் வாழப் பழகிக்கொள்ளும் நடைமுறைக்கு மாற முயற்சி செய்யும் வேளையில், டெல்ட்டா பரவல் அதிகரித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்