Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கிருமித்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க தென் கொரியாவின் புதிய முயற்சி

தென் கொரியா, கிருமித்தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பேருந்து நிலையங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க தென் கொரியாவின் புதிய முயற்சி

(படம்: AFP/Jung Yeon-je)

தென் கொரியா, கிருமித்தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பேருந்து நிலையங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

பேருந்து நிலையத்தைச் சுற்றிக் கண்ணாடிக் கதவுகள்.... நுழைவாயிலில் வெப்பநிலைச் சோதனைக் கருவிகள்....37.5 டிகிரி செல்சியஸுக்கும் மேலான வெப்பநிலையைக் கொண்டவர்களுக்கு கதவுகள் திறப்பதில்லை...

(படம்: AFP/Jung Yeon-je)

என்று பல்வேறு அம்சங்களைக் கொண்ட அறிவார்ந்த பேருந்து நிலையங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நிலையத்தின் மதிப்பும் 84,000 டாலர்.

சோல் நகரில், இதுவரை அத்தகைய 10 நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

நிலையத்தின் குளிர்சாதனக் கட்டமைப்பில் புறஊதாக் கதிர்களை வெளியிடும் கிருமி நீக்கும் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.


பேருந்துகள் வரும் நேரத்தைத் தெரிந்துக்கொள்ள வகைசெய்யும் மின் பலகைகளும் பொறுத்தப்பட்டுள்ளன.

தம்மைச் சுற்றி அனைவருக்கும் வெப்பநிலைச் சோதனை எடுக்கப்படுவதால், பேருந்திற்குக் காத்திருக்கும்போதும் பயமில்லாமல் இருக்கமுடிகிறது என்று கூறுகின்றனர் பயணிகள்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்