Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியா: கிருமித்தொற்றுடன் தொடர்புடைய அரிய நோயால் அவதிப்படுவதாக நம்பப்படும் பிள்ளைகள்

தென் கொரியா: புதிய கொரோனோ கிருமியுடன் தொடர்புடைய அரிய நோயால் அவதிப்படுவதாக நம்பப்படும் முதல் பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

தென் கொரியா: புதிய கொரோனோ கிருமியுடன் தொடர்புடைய அரிய நோயால் அவதிப்படுவதாக நம்பப்படும் முதல் பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட இரண்டு பிள்ளைகள் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாக அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

11 வயதுச் சிறுவனுக்கும், 4 வயதுச் சிறுமிக்கும் நோய் இருப்பதாக நம்பப்படுகிறது.

அவர்கள் இருவருக்கும் COVID-19 நோய்த்தொற்று இருந்தது.

பிள்ளைகளிடையே காணப்படும் 'Paediatric multi-system inflammatory syndrome potentially associated with COVID-19' என்று அழைக்கப்படும் அந்த நோய், Kawasaki எனப்படும் நோயின் அறிகுறிகளைக் கொண்டுள்ளது.

பாதிக்கப்படும் பிள்ளைகளுக்குக் கடுமையான காய்ச்சல், தோலில் தடிப்புகள், சுரப்பி வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றில் அந்த அரிய நோய்ச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்