COVID-19 தடுப்பு மருந்துகளின் ஏற்றுமதியை நிறுத்தத் திட்டமிடும் தென் கொரியா
தென் கொரியா உள்ளூரில் தயாரிக்கப்படும் COVID-19 தடுப்பு மருந்துகளின் ஏற்றுமதியை நிறுத்தத் திட்டமிட்டுவருகிறது.
நாட்டு மக்களுக்குப் போதிய தடுப்பு மருந்துகள் இருப்பதை உறுதிசெய்ய அந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் தென் கொரியாவிற்குச் சுமார் 700,000 முறைப் போடத்தேவையான தடுப்பு
மருந்துகள் வரவிருந்தன.
ஆனால் 432,000 முறை போடத் தேவையான தடுப்பு மருந்து தான் கிடைத்தது.
எஞ்சிய தடுப்பு மருந்துகள் வருவதில் தாமதம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
அதனால் அந்நாட்டில் தடுப்பு மருந்து போடும் பணிகளின் வேகம் குறைந்தது.
உள்ளூரில் உள்ள SK bioscienc நிறுவனம் AstraZeneca மருந்தைத் தயார் செய்கிறது.
அது COVAX திட்டத்தின் கீழ் 64 நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கிறது.
தற்போது தடுப்பு மருந்து ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்துவது குறித்து அதிகாரிகள் பேசிவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரியாவில் இதுவரை சுமார் 1 மில்லியன் முறை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
-Reuters