Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியா: நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குத் தடையாக இருந்த சந்தேகத்தில் சமயப் பிரிவுத் தலைவர் கைது

தென் கொரியா: நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குத் தடையாக இருந்த சந்தேகத்தில் சமயப் பிரிவுத் தலைவர் கைது

வாசிப்புநேரம் -
தென் கொரியா: நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குத் தடையாக இருந்த சந்தேகத்தில் சமயப் பிரிவுத் தலைவர் கைது

படம்: AFP/Ed JONES

தென் கொரியாவைச் சேர்ந்த சமயப் பிரிவுத் தலைவர், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளுக்குத் தடையாக இருந்ததன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

88 வயதான லீ மான்- ஹீ (Lee Man-hee), Shincheonji Church of Jesus என்னும் தேவாலயத்தை வழிநடத்துகிறார்.

அந்த தேவாலயம் சமயக் கோட்பாட்டு முறைக்கு மாறுபட்ட வகையில் செயல்படுவதாகக் குறைகூறப்பட்டு வருகிறது.

தேவாலயக் கூட்டங்கள் பற்றித் தவறான விவரங்களையும் போலியான உறுப்பினர் பட்டியலையும் அதிகாரிகளிடம் வழங்கியதாக லீ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இன்று காலையில் அவர் கைதானார்.

பல ஆதாரங்களை அழிக்க லீ முயற்சி செய்ததாகவும் நீதிபதி கூறியதாக Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்தது.

தேவாலயத்தின் நிதியிலிருந்து 4.69 மில்லியன் டாலர் மோசடி செய்ததாகவும் லீ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அனுமதியின்றிப் பொதுஇடங்களில் சமய நிகழ்ச்சிகளை அவர் வழிநடத்தியாதகவும் கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்