Images
  • dd
    (கோப்புப் படம்: REUTERS/Heo Ran)

தென் கொரியா: தலைநகரில் மோசமடைந்துவரும் COVID-19 நிலவரம்.. விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன

தென் கொரியாவில் நோய்ப்பரவல் மோசமடைந்துவருவதால் அங்கு பாதுகாப்பு இடைவெளி தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

Greater Seoul வட்டாரத்தில் கடந்த மாதம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. ஆனால் நிலைமை மேம்படாத காரணத்தால், கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன.

அங்கு 100 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமய, விளையாட்டு நிகழ்ச்சிகளில் குறைவானோரே கலந்துகொள்ள முடியும்.

கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வோரிடையே இன்னும் கூடுதலான இடைவெளி இருப்பது கட்டாயம்.

தென் கொரியாவில் தொடர்ந்து 4 நாட்களாக 200க்கும் மேற்பட்டோர் புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கிருமித்தொற்றுக்கு எதிரான முயற்சிகள் வீண்போவதாகவும், தலைநகர் சோலில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் அந்நாட்டுப் பிரதமர் சுங் சீ கியுன் (Chung Sye-Kyun) தெரிவித்தார்.

தென் கொரியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 494 பேர் மாண்டனர். 

Top