Images
  • Flight Features
    (படம்: Pixabay) 

வூஹானிலிருந்து திரும்பிய 5 தென் கொரியர்களுக்குக் கிருமித்தொற்று அறிகுறிகள்

சீனாவின் வூஹான் நகரில் இருந்த தென் கொரியர்கள் சிறப்பு விமானம் மூலம் சோல் (Seoul) சென்று சேர்ந்துள்ளனர்.

தென் கொரியர்கள் 140 பேரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அந்த விமானத்தில் இருந்ததாக Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்களில் ஐவரிடம் கிருமித்தொற்று அறிகுறி காணப்பட்டது.

அவர்கள் கூடுதல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  

Top