Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'மற்ற நாடுகளைவிட விரைவாகக் கூட்டுத் தடுப்பாற்றலைப் பெற்றுவிடுவோம்': தென் கொரிய அதிபர் நம்பிக்கை

தென் கொரியா, ஏனைய நாடுகளைக் காட்டிலும் விரைவாகக் கூட்டுத் தடுப்பாற்றலைப் பெற்றுவிடும் எனத் தாம் நம்புவதாக அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-in) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

தென் கொரியா, ஏனைய நாடுகளைக் காட்டிலும் விரைவாகக் கூட்டுத் தடுப்பாற்றலைப் பெற்றுவிடும் எனத் தாம் நம்புவதாக அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-in) கூறியுள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், வரும் செப்டம்பருக்குள் தடுப்பூசி போடும் முதற்கட்டத்தை முடித்துக்கொள்ள, அரசாங்கம் திட்டமிடுவதாகக் கூறினார்.

அப்போது தென் கொரியக் குடியிருப்பாளர்களிடம், கூட்டுத் தடுப்பாற்றல் எட்டப்படுமெனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

கடந்த சில தினங்களாகத் தினசரி சுமார் 500 பேரிடம் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுவந்தது.

ஆனால், இன்று அந்த எண்ணிக்கை 389ஆகக் குறைந்துள்ளது.

தென் கொரியாவின் காப்பிக் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஏனைய உள்ளரங்க வர்த்தகங்களில் நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படவுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்