Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கை குண்டு வெடிப்பு : 150 பேர் பலி, மேலும் நூற்றுக்கணக்கானோர் காயம்

இலங்கையிலுள்ள 3 தேவாலயங்களிலும் 3 சொகுசு ஹோட்டல்களிலும் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 150 பேர் பலியானதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாசிப்புநேரம் -
இலங்கை குண்டு வெடிப்பு : 150 பேர் பலி, மேலும் நூற்றுக்கணக்கானோர் காயம்

படம் : Facebook@sebastianchurch150

இலங்கையிலுள்ள 3 தேவாலயங்களிலும் 3 சொகுசு ஹோட்டல்களிலும் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 150 பேர் பலியானதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது மருத்துவமனையில் 300க்கும் அதிகமானோர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொகுசு ஹோட்டல்களையும், தேவாலயங்களையும் இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

தலைநகர் கொழும்பிலுள்ள செயிண்ட் அந்தோணி தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 160 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிற்கு அப்பால் உள்ள மேலும் இரண்டு தேவாலயங்களிலும் வெடிப்புகள் நேர்ந்தன.

குண்டு வெடிப்பிற்கானக் காரணம் இன்னும் தெரியவில்லை.

குண்டு வெடிப்பு தொடர்பாக Facebookஇல் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்