Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கை குண்டு வெடிப்பு : இலங்கைத் தலைவர்கள் கண்டனம்

தேவாலயங்களிலும், சொகுசு ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் "கோழைத்தனமான தாக்குதல்கள்" என்றுகூறி இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
இலங்கை குண்டு வெடிப்பு : இலங்கைத் தலைவர்கள் கண்டனம்

(படங்கள்: Facebook@sebastianchurch150)

தேவாலயங்களிலும், சொகுசு ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் "கோழைத்தனமான தாக்குதல்கள்" என்றுகூறி இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

குண்டு வெடிப்பில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்டோர் மாண்டதாகவும், 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குண்டு வெடிப்புச் செய்தி தமக்கு அதிர்ச்சியளிப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை அமைதி காக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

மீட்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்றுவருவதாக, இலங்கை அமைச்சர்கள் கூறினர்.

மக்களை வீட்டிலே இருக்கும்படியும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்