Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பதவியைத் துறந்த இலங்கைப் பிரதமர் ராஜபக்ச

இலங்கைப் பிரதமர் ராஜபக்ச தமது பதவியைத் துறந்துவிட்டார்.

வாசிப்புநேரம் -
பதவியைத் துறந்த இலங்கைப் பிரதமர் ராஜபக்ச

(படம்: REUTERS/Stringer)

இலங்கைப் பிரதமர் ராஜபக்ச தமது பதவியைத் துறந்துவிட்டார்.

தம்முடைய இல்லத்தில் வைத்து திரு. ராஜபக்ச பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அக்டோபர் மாதம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னைய அதிபர் ராஜபக்சவைப் பிரதமராக நியமித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன.

ஆனால், தாம் நீக்கப்பட்டது சட்டவிரோதம் என்று கூறி பதவி விலக மறுத்து வந்தார் திரு. விக்ரமசிங்க.

இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றார்.

திரு. விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிபர் சிறிசேனவுக்கு ஏற்பட்டது.

கடந்த மாதம் இரண்டு முறை நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் திரு. ராஜபக்ச தோல்வியடைந்தார்.

என்றாலும் அவர் பதவியிலிருந்து விலக மறுத்து வந்தார்.

திரு. ராஜபக்ச, சட்டபூர்வமாகத் தமது அதிகாரத்தை நிரூபிக்கும் வரை பிரதமர் பதவியில் தொடரக்கூடாது என்று இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், அதிபர் சிறிசேனாவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட திரு. ரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்