Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கை: மருத்துவக் கழிவுகளைக் கொண்ட 21 கொள்கலன்கள் பிரிட்டனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன

இலங்கை, சட்டத்திற்குப் புறம்பான 260 டன் கழிவுகளைக் கொண்ட கொள்கலன்களைப் பிரிட்டனுக்குத் திருப்பியனுப்பியுள்ளது.

வாசிப்புநேரம் -

இலங்கை, சட்டத்திற்குப் புறம்பான 260 டன் கழிவுகளைக் கொண்ட கொள்கலன்களைப் பிரிட்டனுக்குத் திருப்பியனுப்பியுள்ளது.

2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், கழிவுகள் கொண்ட 21 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தன.

அவற்றுள் படுக்கைகள், கம்பளங்கள் ஆகியவை மட்டுமே இருக்கவேண்டியது.

ஆனால், கொள்கலன்களில் மருத்துவக் கழிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அவை நெறிமுறைகளை மீறியதாகக் கூறப்பட்டது.

கொள்கலன்களை அனுப்பிய நிறுவனம் அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெற முயற்சி எடுக்கப்பட்டுவருவதாக இலங்கை அதிகாரிகள் சொன்னார்கள்.

வளர்ந்த நாடுகளின் கழிவுகளைப் பெற்று வந்த சில ஆசிய நாடுகள், கடந்த 2 ஆண்டுகளாக, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

அவை, கழிவுகளைத் திருப்பி அனுப்புகின்றன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்