Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தொல்லை தந்த நத்தைகள்…இன்றோ பணத்தை அள்ளித் தருகின்றன

ஒரு காலத்தில் நத்தைகளை தாய்லந்து நெல் பயிரிடும் விவசாயிகள் வெறுத்தனர்.

வாசிப்புநேரம் -
தொல்லை தந்த நத்தைகள்…இன்றோ பணத்தை அள்ளித் தருகின்றன

படம்: AFP/Lillian SUWANRUMPHA

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஒரு காலத்தில் நத்தைகளை தாய்லந்து நெல் பயிரிடும் விவசாயிகள் வெறுத்தனர்.

புதிய பயிர்களை நத்தைகள் உண்டு, சேதப்படுத்தியது அதற்குக் காரணம். அவற்றைக் கண்டால் சாலைகளிலோ ஆற்றிலோ விவசாயிகள் அப்புறப்படுத்தி விடுவர்.

ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. நத்தைகளை விற்று விவசாயிகள் கூடுதல் பணம் ஈட்டத் தொடங்கியுள்ளனர்.

நத்தைகளின் உடலிலிருந்து வெளியாகும் வழவழப்பான திரவம் ஒப்பனைப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. தங்கத்தை விட அதன் மதிப்பு அதிகமாம்.

1,000 நத்தைகளை விற்றால் விவசாயிகள் மாதந்தோறும் 320 டாலரிலிருந்து 650 டாலர் வரை சம்பாதிக்கின்றனர் என AFP செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நத்தை திரவத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கான அனைத்துலகச் சந்தையின் மதிப்பு சுமார் 314 மில்லியன் டாலர் என்று Coherent Market Insights ஆய்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்