Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாம்பைப் பயன்படுத்தி ஆடவரை விசாரித்துள்ள இந்தோனேசிய காவல்துறை

இந்தோனேசியக் காவல்துறை, பாம்பை வைத்து ஓர் ஆடவர் விசாரிக்கப்பட்டதை உறுதிசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -
பாம்பைப் பயன்படுத்தி ஆடவரை விசாரித்துள்ள இந்தோனேசிய காவல்துறை

(படம்: Screengrab from Twitter video)

இந்தோனேசியக் காவல்துறை, பாம்பை வைத்து ஓர் ஆடவர் விசாரிக்கப்பட்டதை உறுதிசெய்துள்ளது.

அந்தச் சம்பவத்தின் காணொளி, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய சந்தேகத்தின் பேரில் அந்நபரை, காவல்துறையினர் கைவிலங்கிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

சந்தக நபர் பயத்தில் அலற, விசாரணை நடத்திய அதிகாரி சிரித்த காட்சியும் காணொளியில் இடம்பெற்றிருந்தது.

பாம்பு, அவரது தலையையும் இடுப்பையும் சுற்றியிருந்தது.

மேலும் காவல்துறை அதிகாரி அந்த ஆடவரின் முகத்திற்கு அருகே பாம்பைக் கொண்டுச் செல்வதும் காணொளியில் தெரிந்தது.

பாப்புவா (Papua) பகுதியின் காவல்துறையினர் அந்தச் சம்பவத்தின் தொடர்பில் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

தவறான நடத்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தலைமைக் காவல் அதிகாரி தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்