Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குழந்தைப் பிறப்பு விகித்தை அதிகரிக்கப் போராடும் தென் கொரியா

சோல்: உலகில் ஆகக் குறைந்த குழந்தைப் பிறப்பு விகித்தைக் கொண்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. 

வாசிப்புநேரம் -
குழந்தைப் பிறப்பு விகித்தை அதிகரிக்கப் போராடும் தென் கொரியா

(படம்: AFP/Jung Yeon-je)

சோல்: உலகில் ஆகக் குறைந்த குழந்தைப் பிறப்பு விகித்தைக் கொண்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று.

பெண்கள் தங்களின் திருமணத்தையும் குழந்தைப் பிறப்பையும் தள்ளிப் போடுவது அதற்கு முக்கியக் காரணம்.

இம்மாதத் தொடக்கத்தில் சோல், குறைந்து வரும் பிறப்பு விகித்தை, அதிகரிக்கும் அனுகூலங்களை அறிவித்தது.

இருப்பினும் அது சொற்பப் பலன்களையே தந்துள்ளதாக, கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலான தென் கொரிய நிறுவனங்கள் தாய்மாரை வேலைக்கு எடுக்கத் தயங்குகின்றன. அவர்கள் நிறுவனத்திற்கு மேம்பட்ட அர்ப்பணிப்புடன் வேலை செய்வார்களா என்ற சந்தேகம் முதலாளிகளுக்கு எழுவது அந்தத் தயக்கத்திற்குக் காரணம்.

அவர்களால் நீண்ட நேரத்திற்கு வேலை செய்ய முடியாது என்ற அச்சம் மற்றொரு காரணம்.

அதே நேரத்தில், சட்டரீதியாக வழங்கப்படும் பேறுகால விடுப்பிற்குப் பணம் செலுத்துவதைத் தவிர்க்கவும் நிறுவனங்கள் விரும்புகின்றன.

குழந்தையோடு கூடிய பெண்களுக்கு நிறுவனத்தில் இடமில்லை என்பதைப் பெரும்பாலான முதலாளிகள் நேரடியாகவே தங்களிடம் கூறுவதாகத் தென் கொரியப் பெண்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

வேலை செய்யும் பெண்களில் பெரும்பாலோர், 40 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஒற்றையராகவும் குழந்தை இல்லாதவர்களாகவும் இருப்பதாகப் பெண்மணி ஒருவர் குறிப்பிட்டார்.

அதன் காரணமாகவே தென் கொரியப் பெண்கள், திருமணத்தையும் பிள்ளைப் பேற்றையும் ஒத்திப் போடுவதாக அவர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்