Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியா: 60 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு AstraZeneca தடுப்பூசிகளை மீண்டும் போடுவது பற்றி ஆராய்கிறது

தென் கொரியாவில் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த 60 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு AstraZeneca தடுப்பூசிகளை மீண்டும் போடுவது பற்றி ஆராயப்படுகிறது.

வாசிப்புநேரம் -

தென் கொரியாவில் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த 60 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு AstraZeneca தடுப்பூசிகளை மீண்டும் போடுவது பற்றி ஆராயப்படுகிறது.

நாட்டில் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட மாட்டா என்று தென் கொரிய பிரதமர் அறிவித்துள்ள வேளையில் அது பற்றித் தெரியவந்துள்ளது.

தற்போதுள்ள விதிகள் அடுத்த மூன்று வாரங்களுக்குத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஐந்து பேருக்கும் மேல் கூடுவது தென் கொரியா முழுதும் தடை செய்யப்பட்டுள்ளது.

நேற்று அங்கு புதிதாக 700 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. இன்று அந்த எண்ணிக்கை 671. மேலும் 6 பேர் மாண்டனர்.

அவர்களையும் சேர்த்து தென் கொரியாவில் நோய்த்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 1,760க்கும் அதிகம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்