Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியா: கிருமித்தொற்றுக்கு ஆளாகும் 30% நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லை

தென் கொரியாவில் புதிதாய்க் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் 30 விழுக்காட்டினருக்கு அறிகுறி ஏதும் தென்படவில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
தென் கொரியா: கிருமித்தொற்றுக்கு ஆளாகும் 30% நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லை

(படம்: AFP/Jung Yeon-je)

தென் கொரியாவில் புதிதாய்க் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் 30 விழுக்காட்டினருக்கு அறிகுறி ஏதும் தென்படவில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதனால், கிருமிப்பரவலைக் கண்காணித்து முறியடிப்பதன் தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றுக்கான அறிகுறி இருப்பவர்களைப் போலவே, எந்த அறிகுறியும் இல்லாதவர்களிடமும் கிருமிகள் அதே அளவில் உள்ளன என்பதற்கு உறுதியான சான்றுகள் ஆய்வில் கிடைத்துள்ளன.

கிருமித்தொற்றுக்கு ஆளாகி, அறிகுறிகள் ஏதும் இறுதிவரை தென்படாமலேயே குணமடைவோர் ஒரு வகையினர். தொடக்கத்தில் அறிகுறி இல்லாவிட்டாலும் நாளடைவில் வெளிப்படையாகவே உடல்நலம் குன்றுவோர் வேறு வகையினர்.

இந்த இருதரப்பினருக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் அண்மை ஆய்வு உதவியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்