Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

டிரம்ப்-கிம் சந்திப்பை ஆரவாரத்துடன் பார்த்த தென் கொரியர்கள்

டிரம்ப்-கிம் சந்திப்பை ஆரவாரத்துடன் பார்த்த தென் கொரியர்கள்

வாசிப்புநேரம் -
டிரம்ப்-கிம் சந்திப்பை ஆரவாரத்துடன் பார்த்த தென் கொரியர்கள்

( படம்: AFP )

சோல்: நூற்றாண்டின் ஆக முக்கியமான சந்திப்பு என்று அழைக்கப்படும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இருவருக்கும் இடையில் இன்று (ஜூன் 12) நடைபெற்ற சந்திப்பை தென்கொரியர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்

சிங்கப்பூரின் கப்பெல்லா ஹோட்டலில் முதல் முறையாகச் சந்தித்தனர் இரு நாட்டுத் தலைவர்கள். டிரம்ப்புக்கும் கிம்முக்கும் இடையில் நடந்த சமரசப் பேச்சு பியோங்யாங்கில் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று தென்கொரியர்கள் நம்புகின்றனர்.

உச்சநிலைச் சந்திப்பு முழுமையான அணுவாயுதக் களைவைக் கொண்டு வரும் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் இன்று கூறினார்.

இதற்கு முன் இரு கொரியாக்களின் தலைவர்களிடையே நடந்த சந்திப்புகள் சிங்கப்பூரில் உச்சநிலைச் சந்திப்பு நடைபெற வழிவகுத்தன. திரு மூன் சந்திப்பை தமது அமைச்சர்களுடன் நேரடியாகத் தொலைக்காட்சியில் பார்த்தார்.

1950இலிருந்து 1953 வரை நடந்த கொரியப் போரைத் தொடர்ந்து தென்கொரியா ஆசியாவின் ஆகப் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆனால் வடகொரியா தனது அண்டை நாட்டுடன் ஒப்பிடுகையில் பொருளியல் ரீதியில் பின்தங்கியுள்ளது. தனது அணுவாயுதத் திட்டத்தால் மற்ற நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.

சோலில் பல பகுதிகளில் மக்கள் தொலைக்காட்சியை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இருவரும் சந்தித்ததைத் தொடர்ந்து அவர்கள் கைதட்டி ஆரவாரம் எழுப்பினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்