Images
  • India

தாய்லந்து: சொங்க்ரான் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 400 பேர் பலி

தாய்லந்தில் சொங்க்ரான் (Songkran) என அழைக்கப்படும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது இம்முறை சுமார் 400 பேர் சாலை விபத்துகளில் மாண்டனர். 3, 500 பேர் காயமடைந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்புநோக்க அந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனமோட்டுவது, சாலை விபத்துகளுக்கான முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.

வரம்பு மீறி வேகமாக வாகனத்தைச் செலுத்துவதும், அடுத்த முக்கியக் காரணம். பெரும்பாலான விபத்துகள், மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்டவை.


உங்கள் கருத்து

Top