Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்கும் சோனியா காந்தி

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின்  தலைவர் பதவியிலிருந்து அதன் முன்னாள் தலைவர், ராகுல் காந்தி பதவி விலகியதைத் தொடர்ந்து, அவரது தாயார், சோனியா காந்தி, கட்சியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் எற்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்கும் சோனியா காந்தி

(படம்: AFP/Prakash Singh)

புதுடில்லி: இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து அதன் முன்னாள் தலைவர், ராகுல் காந்தி பதவி விலகியதைத் தொடர்ந்து, அவரது தாயார், சோனியா காந்தி, கட்சியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் எற்றுள்ளார்.

49 வயது ராகுல் காந்தி, அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் பெரும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் பதவி விலகினார்.

1948இலிருந்து காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் அரசியல் களத்தை ஆதிக்கம் செய்து வந்தது. கடந்த பத்தாண்டுகளாக, அந்தக் கட்சிக்கு மக்களின் ஆதரவு குறைந்து வந்துள்ளது.

காங்கிரஸின் தோல்விகளுக்கு, திரு ராகுல் காந்தியின் கட்சி நிர்வாகமே காரணம் என்று விமர்சகர்கள் குறை கூறி வந்ததை அடுத்து, அவர் பதவி விலகினார்.

அதனை அடுத்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக, 72 வயது சோனியா காந்தி அறிவிக்கப்பட்டார்.

இதற்கு முன், 1998 முதல் 2017 வரை கட்சியின் தலைவராக இருந்தார் அவர்.

2004, 2009 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவ மாற்றங்கள் அமைந்ததாக நம்பப்படுகிறது.

கட்சிக்கு நிரந்தரமானதொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், திருமதி சோனியா காந்தி, கட்சியை நிலைத்தன்மையை செய்வார் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்