Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தெற்கு ஆசியாவில் கனத்த மழை: 40 பேர் மரணம்

தெற்கு ஆசியாவில் கடந்த இரண்டு நாள்களில், பெய்த கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் குறைந்தது 40 பேர் மாண்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தெற்கு ஆசியாவில் கனத்த மழை: 40 பேர் மரணம்

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

தெற்கு ஆசியாவில் கடந்த இரண்டு நாள்களில், பெய்த கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் குறைந்தது 40 பேர் மாண்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேப்பாளத்தில், கிழக்கு வட்டாரத்திலும் தென் பகுதியிலும் பெய்த கனத்த மழையால் 27 பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகர்
காத்மாண்டுவில், சுவர் இடிந்து விழுந்ததில்
மூவர் மாண்டனர். 5 பேரை காணவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆறுகள் பெருகி, வீடுகளை மூழ்கடித்ததால்,மீட்பு பணியாளர்கள் படகுகளைப் பயன்படுத்தி குடியிருப்பாளர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.

இவ்வேளையில், இந்தியாவின் அஸ்சாம் மாநிலத்தில் கடந்த மூன்று நாள்களாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில்
குறைந்தது 10 பேர் மாண்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பெய்யும் கனத்த மழையால், அஸ்சாமின் 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அடுத்த மூன்று நாள்களுக்கு மழை தொடரும் என்றும்
நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று
அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அஸ்ஸாம் தற்போது உச்ச விழிப்பு நிலையில் உள்ளது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்