Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியாவில் மீண்டும் நடப்புக்கு வரும் கட்டுப்பாடுகள்

தென் கொரியாவில் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடப்புக்கு வருகின்றன.

வாசிப்புநேரம் -

தென் கொரியாவில் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடப்புக்கு வருகின்றன.

தலைநகர் சோலில் 6 பேர் வரை ஒன்றுகூடலாம். பிற வட்டாரங்களில் 8 பேர் ஒன்றுகூடல்களில் கலந்துகொள்ளலாம்.

இதற்கு முன்னதாக 10 அல்லது 12 பேர் வரை ஒன்றுகூட அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கும் மேலாக உணவகங்கள், காப்பிக் கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான பொது வசதிகளில் மக்கள் தடுப்பூசிச் சான்றிதழைக் காட்ட வேண்டும்.

அல்லது கிருமித்தொற்று இல்லை எனும் பரிசோதனை முடிவுகள் வைத்திருக்கவேண்டும்.

ஓமக்ரான் வகை கிருமிப்பரவல் அதிகரித்துள்ள கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றின் மத்தியில் தென் கொரியாவில் கட்டுப்பாடுகள் மீண்டும் நடப்புக்கு வருகின்றன.

அடுத்த 4 வாரங்களுக்கு நடவடிக்கைகள் நடப்பில் இருக்கும் எனத் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு 6 பேருக்கு ஓமக்ரான் வகை கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டதால் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்