Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியா: முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள விரைவில் அனுமதிக்கப்படலாம்

தென் கொரியாவில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை, அடுத்த மாதத்திலிருந்து வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள அனுமதிப்பது குறித்து ஆராயப்படுகிறது. 

வாசிப்புநேரம் -

தென் கொரியாவில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை, அடுத்த மாதத்திலிருந்து வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள அனுமதிப்பது குறித்து ஆராயப்படுகிறது.

கிருமித்தொற்றுச் சூழல் கட்டுக்குள் இருக்கும் நாடுகளுடன் தென் கொரியா இணைந்து செயல்படுவது குறித்து யோசித்துவருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூர், தைவான் போன்றவற்றுடன் சிறப்புப் பயண ஏற்பாட்டைச் செய்துகொள்ளத் தென்கொரிய அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

தடுப்பூசி போடும் திட்டத்தில், ஓராண்டுக்கும் மேல் வெளிநாடுகளில் தங்கவிருக்கும் வர்த்தகப் பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தற்போது, மூன்று மாதத்துக்குக் குறைவாக வெளிநாடுகளில் வேலை காரணமாகத் தங்கவேண்டியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திற்குள், தென்கொரியா 36 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடுவதற்குத் திட்டமிட்டுள்ளது.

அதன் 51 மில்லியன் பேர் கொண்ட மக்கள்தொகையில், இதுவரை 4.5 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டுள்ளனர்.

18 விழுக்காட்டினர், முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்